தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 77 பேர் பலி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
திருச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்த காட்சி.
தமிழக சுகாதாரத்துறைறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தஞ்சை மாவட்டத்தில் ஆய்வுக் கூடங்களில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கருப்பு பூஞ்சை நோயால் தமிழகத்தில்1736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 ஆயிரம் அளவிற்கு மருந்துகள் கேட்கப்பட்டுள்ளது. மத்திய அரசிலிருந்து 11,796 மருந்துகள் மட்டுமே வந்துள்ளது. 4366 மருந்துகள் கையிருப்பில் உள்ளது. இதுவரையிலும் 77 பேர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசிகள் வரவர உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு கோடியே 10 லட்சம் வந்துள்ளது. ஒரு கோடியே 5லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தற்போது 6 லட்சத்து 16 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதனை பிரித்து அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டு, மூன்று நாட்கள் பயன்பாட்டில் இருக்கும். அட்டவணைப்படி ஜூன் மாதத்திற்கான 42 லட்சத்தை தடுப்பூசி மருந்தினை பிரித்துக் கொடுத்து அனுப்புகின்றனர். இனிமேல் தடுப்பூசி கிடைப்பதில் தடை இருக்காது.
தஞ்சை அரசு மருத்துவமனையில் குழந்தையின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டது குறித்து மருத்துவமனை சென்று ஆய்வு நடத்தப்படும். சித்த மருத்துவம்,யோகா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவம் தமிழகத்தில் 69 இடங்களில் அமைக்கப்பட்டு 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்றுள்ளனர். சிகிச்சை முடித்து வெளியேறும் போது அவருக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu