திருச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ரத்த தானம்

திருச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ரத்த தானம்
X
திருச்சியில் நடந்த ரத்த தான முகாமை இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
திருச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடந்த ரத்த தான முகாமில் 143 பேர் ரத்த தானம் செய்தனர்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தந்தை பெரியாரின் 143-வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஆர்.சி.ஆதிமூலம் பள்ளியில்தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த முகாமினை திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தொடங்கிவைத்தார். இதில் 143 நிர்வாகிகள் ரத்ததானம் வழங்கினர்.நிகழ்ச்சிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராயல் ராஜா தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் முரளி, மாணவரணி செயலாளர் சரண், பொருளாளர் பொன்னுசாமி, துணைத்தலைவர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட துணை செயலாளர் முருகதாஸ், இளைஞரணி செயலாளர் பாரத், இளைஞரணி தலைவர் நாகராஜன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ரத்ததான முகாமினை தொடங்கி வைக்க வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜிக்கும், பொதுமக்களுக்கும் பெரியார் எழுதிய 'பெண் ஏன் அடிமையானாள்?' என்ற புத்தகத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பரிசாக வழங்கினர்.

Tags

Next Story
ai marketing future