தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம்
திருச்சியில் நடந்த தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் திருச்சி டவுன் ஹால் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் உள்ள திருச்சி மாநில மைய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு
மாநிலச் செயலாளர் இமானுவேல் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கூட்டத்தின் முக்கிய அம்சம் குறித்து விளக்கி பேசினார். இதில் மாநில தலைவர் முத்தையா, மாநிலச் செயலாளர் செந்தில்குமார், மாநில பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் நடராஜ் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்டு வந்த பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (சிபிஎஸ்) பிடித்தம் செய்யக் கூடாது என்ற அரசு உத்தரவுை உடனடியாக தடை செய்யவும், பழைய ஓய்வூதிய அறிவிப்பு வரும்வரை புதிய பங்களிப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய் துறை செயலர் தமிழக முதல்வர், வருவாய் துறை அமைச்சர் ஆகியோரை பணிவோடு கேட்டுக்கொள்வது கோரிக்கையை தமிழக முதல்வர், வருவாய்த்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், வரும் அக்டோபர் 1-ந்தேதி மாலை 5.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதியான முறையில் ஒன்று திரண்டு கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து மாவட்டத்தில் உள்ள மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளை மாநில சங்கம்கேட்டுக் கொள்கிறது.
திருச்சி மாவட்டத்தில் மணச்சநல்லூர் வட்ட புதிய நிர்வாகிகள் விஜயகுமார், வட்டச் செயலாளராக ஜீவா, வட்ட பொருளாளராக ரமேஷ், வட்ட துணைத் தலைவராக டேவிட் ஆகியோர் ஒருமனதாக நியமித்து தீர்மானிக்கப்படுகிறது. தமிழகத்தில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள் (சிபிஎஸ்) திட்டத்தில் உள்ள அனைவரும் தமிழக முதல்வருக்கு தங்கள் கோரிக்கைகளை தனி, தனியாக பதிவுத் தபாலில் பதிவு செய்து முதல்வர் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu