தாயுமான சுவாமி கோவில் தெப்ப உற்சவம்

தாயுமான சுவாமி கோவில் தெப்ப உற்சவம்
X

தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப் பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார்.


தெப்பகுளத்தில் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமான சுவாமிக்கு தெப்பத்திருவிழா ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் உத்திரத்திற்கு முந்தைய நாள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான தெப்பத் திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அன்று மாலை முதல் சுவாமி அம்பாளுக்கு ஒவ்வொருநாளும் இரவு உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம் மற்றும் புறப்பாடு நடைபெற்று வருகிறது. தெப்பக்குளத்தின் நடு பகுதியில் உள்ள நீராழி மண்டபம் மற்றும் மலைக்கோட்டை மேலே உள்ள கோபுரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
why is ai important to the future