திருச்சி:கொரோனா நோய்த் தொற்று தடுக்க மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு
திருச்சியில் கல்லூரி மாணவிகள் கொரோனாவிற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
கொரோனா நோய்த்தொற்று கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு மருந்து கண்டுபிடிப்பதற்குள் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோய்த்தொற்று பரவாமல் இருக்க, அரசு நீண்ட நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.
இதனால் மக்கள் பெறும் சிரமத்திற்கு ஆளானார்கள். மேலும் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி, ஏராளமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அனைவரும் தவறாமல் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இதில் முதல் அலை, 2-வது அலை, இப்போது மூன்றாவது அலை. ஒவ்வொரு அலையின் போது கொரோனா வைரஸ் கிருமி தனது உருவை மாற்றி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி மற்றும் முகக்கவசம் ஆகியவற்றின் அவசியத்தை பொதுமக்களிடையே கொண்டு செல்ல ஏதுவாக கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் கட்டாயம் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் தங்கள் கைகளில் நோய் தொற்றை தடுக்கும் விதத்தி்ல் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu