ஸ்ரீரங்கத்தில் ஜேஷ்டாபிஷேகம் கோலாகலம் தங்க குடத்தில் புனித நீர் சுமந்து வந்த யானை
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி காவிரி ஆற்றில் இருந்து தங்ககுடத்தில் யானை மீதும், 28 வெள்ளிக்குடங்களிலும் புனித நீர் தோள்களில் தூக்கியும் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
திருச்சி:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி காவிரி ஆற்றில் தங்கக்குடத்தில் யானை மீதும், 28 வெள்ளிக்குடங்களிலும் புனித நீர் தோள்களில் தூக்கியும் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து மூலவர் ரெங்கநாதர், உற்சவர் நம்பெருமாள், உபயநாச்சியார்கள் திருமேனி கவசங்கள், திருவாபரணங்கள் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. அதிலிருந்த சிறு பழுதுகள் செப்பனிடப்பட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன.
பின்னர் உற்சவ நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்களுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. தைலகாப்பு மூலவர் ரெங்கநாத பெருமாள் மீது பூசப்பட்டது. இதையடுத்து பெருமாளின் திருமுகம் தவிர்த்து திருமேனியின் இதர பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்பட்ட.து.
48 நாட்கள் கழித்து தைலம் உலர்ந்த பின் தான் ரெங்கநாத பெருமாளின் திருமேனியை முழுமையாக தரிசிக்க முடியும். அதுவரை முகத்தை மட்டும் தரிசிக்க முடியும். உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்களுக்கும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கு காரணமாக இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதி இல்லை. கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu