திருச்சியில் பழிக்குப்பழியாக ரவுடி வெட்டிக்கொலை

திருச்சியில் பழிக்குப்பழியாக ரவுடி வெட்டிக்கொலை
X

திருச்சியில் கொலை  செய்யப்பட்ட நிஷாந்த்

திருச்சியில் பழிக்குப்பழியாக ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி தென்னூர் வாமடம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் என்கிற வாழைக்காய் விஜய். கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில் கடந்த வருடம் நவம்பர் மாதம் விஜய் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியில் உள்ள கல்யாணசுந்தரபுரத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன், இருபத்தோறு வயது நிசாந்த் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் தான் அனைவரும் ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர்.

ஆனால் இன்று அதிகாலை 5.45 மணியளவில் நிசாந்த் பாத்ரூம் செல்வதற்காக ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே குப்பாங்குளம் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிப்பறைக்கு சென்றார். அங்கு அவரை பின் தொடர்ந்த 5 பேர் நிசாந்தை அரிவாளால் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தகவலறிந்ததும் சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். போலீஸ் துணை கமிஷனர், உதவி கமிஷனர், காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் கொலை நடந்த இடத்தை நேரில் பார்த்து, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த நிசாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தடயங்களை சேகரித்தனர்.

திருச்சி காந்திமார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் முதல் கட்டமாக, வாழைக்காய் விஜய் கொலை தொடர்பாக ஜெயச்சந்திரன் தரப்பினரை விஜயின் அண்ணன், தம்பிகள் வெட்டிகொலை செய்ய வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே உளவுத்துறை போலீசார் தரப்பில் எச்சரித்திருந்த நிலையில் இன்று இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Tags

Next Story