மணல் திருடி கொண்டு வந்த லோடு ஆட்டோ பறிமுதல்; இருவர் தப்பி ஓட்டம்.

மணல் திருடி கொண்டு வந்த லோடு ஆட்டோ பறிமுதல்; இருவர் தப்பி ஓட்டம்.
X

பறிமுதல் செய்யப்பட்ட மணல் மூட்டைகள்

திருச்சியில் ஆற்று மணல் திருடிக்கொண்டு வந்த லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி கிழக்கு தாலுகாவுக்கு உட்பட்ட சிந்தாமணி, தேவதானம் ஆகிய கிராமங்களுக்கு கிராம நிர்வாக அலுவலராக கிரேசி மேரி (வயது 30) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை இவரது எல்லைக்கு உட்பட்ட சஞ்சீவி நகர் பகுதியில் ரோந்து பணியில் இருந்தார். அப்போது ஒரு லோடு ஆட்டோவில் சிலர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து ஆற்று மணலை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் சஞ்சீவி நகரில் உள்ள ஒரு டீக்கடை முன்பு நின்று வாகனங்களை சோதனை செய்து வந்தார். அப்போது அங்கு வந்த ஒரு லோடு ஆட்டோவை நிறுத்திய போது, அதில் இருந்த இருவர் ஆட்டோவை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். அந்த ஆட்டோவில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கடத்தி வரப்பட்ட மணல் இருந்ததை கண்ட கிராம நிர்வாக அலுவலர் கிரேசி மேரி இதுகுறித்து கோட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து, ஆற்று மணலை கடத்தி வந்த மினி லோடு ஆட்டோவையும், அந்த ஆட்டோவை ஓட்டி வந்த கொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார், கருணாகரன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்து இருவரையும் தேடி வருகின்றார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!