திருச்சியில் ராஜீவ் காந்தி சிலைக்கு எம்.பி. திருநாவுக்கரசர் மரியாதை

திருச்சியில்  ராஜீவ் காந்தி சிலைக்கு எம்.பி. திருநாவுக்கரசர் மரியாதை
X

திருச்சியில் ராஜீவ் காந்தி சிலைக்கு மலை அணிவிக்கும் திருநாவுக்கரசர் எம்.பி.

திருச்சியில் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி திருநாவுக்கரசர் எம்.பி. அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ரயில் நிலையம் அருகே உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு எம்.பி.திருநாவுக்கரசர் மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

1991ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த ராஜீவ் காந்தி, மே 21ஆம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் திட்டமிட்டு தற்கொலைப்படை தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா உட்பட உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடைபெற்று இன்றுடன் 30ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.

இந்நிலையில் அந்நாளை அனுசரிக்கும் விதமாக திருச்சி ரயில் நிலையம் அருகே உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மாநில பிற்படுத்தபட்டோர் சிறுபான்மை பிரிவு பேட்ரிக் ராஜ்குமார், மாவட்ட தலைவர்கள், கோவிந்தராஜ், ஜவகர், ரெக்ஸ், சந்துரு, முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் சந்திரன் மற்றும் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!