திருச்சி கிராப்பட்டியில் கோயில் மதில் சுவர் கட்டுவதற்கு வந்த எதிர்ப்பால் பரபரப்பு

திருச்சி கிராப்பட்டியில் கோயில் மதில் சுவர் கட்டுவதற்கு வந்த எதிர்ப்பால் பரபரப்பு
X
திருச்சி கிராப்பட்டியில்  பிரச்சினை நடந்த இடத்தில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்
திருச்சி கிராப்பட்டியில் கோயில் மதில் சுவர் கட்டுவதற்கு வந்த எதிர்ப்பால் பரபரப்பு ஏற்பட்டது

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் சரகத்தை சேர்ந்தது கிராப்பட்டி.இங்குள்ள மலை முருகன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மதில் சுவர் கட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் பொது பாதைக்கு இடையூறாக இருந்ததாக கூறி அந்த சுவரை சிலர் இடித்து நடை பாதையாக பயன்படுத்தி வந்தனர்.

இதை எதிர்த்து கோவில் நிர்வாகம் சார்பில் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் மதில் சுவர் கட்டிக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மதில் சுவர் கட்டும் பணி நடந்தது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இதனைத் தொடர்ந்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். திருச்சி மேற்கு தாசில்தார் ரமேஷ் இருதரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் மோதல் தவிர்க்கப்பட்டது

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை-  நிறுவனங்களுக்கு அறிவுரை