/* */

திருத்தங்கள் செய்யாதவரை புதிய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம்

திருத்தங்கள் செய்யாதவரை புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவிததார்.

HIGHLIGHTS

திருத்தங்கள்  செய்யாதவரை புதிய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம்
X

திருச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, புதிய கல்வி கொள்கை குறித்த மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் மட்டும் பங்கேற்க வேண்டும் என்ற அறிவிப்பு கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டு வைப்பது போல் இருப்பதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

கூட்ட அறிவிப்பு குறித்து நாங்கள் ஈமெயில் அனுப்பி இருந்தோம். ஆனாலும் எவ்வித பதிலும் வரவில்லை. எனவே கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் நாங்கள் கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என புரிந்து கொள்ளக் கூடாது. கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை.

மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட மெயிலுக்கு எவ்வித பதிலும் வரவில்லை. பதில் வரும் என எதிர்பார்க்கிறோம். வராத பட்சத்தில் டெல்லிக்கு சென்று எங்களுடைய கருத்துகளை முன்வைக்க உள்ளோம்.

புதிய கல்வி கொள்கை பாதகமானது. குலக்கல்வித் திட்டத்தை நினைவுபடுத்துகிறது. இதனை நாங்கள் அரசியலாக பார்க்கவில்லை. மாணவர் நலனே முக்கியம்.மோதல் போக்குடன் இல்லாமல் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட விரும்புகிறோம்.

நாங்கள் சொல்லும் திருத்தங்களை ஏற்றுக் கொண்டால் புதிய கல்விக் கொள்கையை ஏற்போம். புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கையை ஏற்பதாக இல்லை. இருமொழி கொள்கையே அண்ணாவின் கொள்கை.

சட்டமன்றத்தில் முதல் குரலாக நீட்டுக்கு எதிராக எங்கள் குரல் எதிரொலிக்கும். இது குறித்து ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் மீண்டும் இந்த தீர்மானம் வலியுறுத்தப்படும் என்றார்.

Updated On: 17 May 2021 8:57 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  6. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  7. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  8. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  9. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  10. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி