திருச்சி:நீட் தேர்வு ரத்து கோரி ஜனாதிபதிக்கு தபால் அனுப்பும் போராட்டம்

திருச்சி:நீட் தேர்வு ரத்து கோரி ஜனாதிபதிக்கு தபால் அனுப்பும் போராட்டம்
X

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருச்சியில் மாணவர் பெருமன்றத்தினர் ஜனாதிபதிக்கு மனு அனுப்பும் போராட்டம் நடத்தினர்.

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையத்தில் ஜனாதிபதிக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும் ஜனாதிபதிக்கு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் முன்பு இந்த போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் முன்னிலை வகித்தார்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர். நீட் தேர்வுக்கு எதிராகவும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் அப்போது அவர்கள் பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். அதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கு தபால்களை அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!