திருச்சியில் வ.உ.சி. படத்திற்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவிப்பு

திருச்சியில் வ.உ.சி. படத்திற்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவிப்பு
X

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வ.உ.சி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.. அருகில் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதய ராஜ் உள்ளார்.

திருச்சியில் வ.உ.சி. படத்திற்கு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்தார்.

சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்தசெம்மல் வ.. உ.. சிதம்பரனார் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க .அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த. சிதம்பரனார் உருவ படத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி கண்டோன்மென்ட் அருகில் அமைந்துள்ள வ.. உ.. சி..சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன், கோவிந்தராஜன். வண்ணை அரங்கநாதன், மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் மதிவாணன் மற்றும் மாவட்ட. ஒன்றிய, பகுதி, நகர பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture