/* */

திருச்சியில் அண்ணா சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவிப்பு

அண்ணாவின் 113 வது பிறந்த நாளையொட்டி திருச்சியில் அவரது சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்தார்.

HIGHLIGHTS

மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாவின்113-வது பிறந்தநாளையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து வி.என்.நகரில் உள்ள திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் ரூ.2.50 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகளை காசோலையாக பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ, கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், கவிஞர் சல்மா, செந்தில், கோவிந்தராஜன், கருணாநிதி, பகுதி செயலாளர் மதிவாணன், சபியுல்லா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள், தி.மு.க. சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Sep 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு