இஸ்லாமியர்கள் படுகொலை; பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம்

அஸ்ஸாமில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதைக்கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர்.
அசாமில் இஸ்லாமியர்களை குறிவைத்து படுகொலை செய்வதை கண்டித்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பாலக்கரை ரவுண்டானாவில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சபியுல்லாஹ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முஜீபுர் ரஹ்மான் முன்னிலை வகித்தார். எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் பைஜி, கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மண்டல தலைவர் அமீர் பாஷா, ஆர்ப்பாட்டத்திற்கான காரணத்தை விளக்கியும், அசாம் அரசை கண்டித்து உரையாற்றினார். மேலும் மாவட்ட செயலாளர் அப்சல் கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பகுதி செயலாளர் அப்துல்லாஹ் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu