மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மலைக்கோட்டை பகுதி மாநாடு

பகுதி குழு செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ராமர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட மலைக்கோட்டை பகுதிக்குழுவின் 8-வது மாநாடு சுமங்கலி மஹாலில் மார்க்கெட் அண்ணாமலை நினைவு அரங்கத்தில் நடைபெற்றது.
மாநாட்டிற்கு பகுதிக்குழு உறுப்பினர் இளையராஜா தலைமை தாங்கினார்.மாநாட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால் வாழ்த்துரை வழங்கினார்.மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா நிறைவுரையாற்றினார்.
மாநாட்டில் காந்திமார்க்கெட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வறை கட்டித்தர வேண்டும்.மாநகரில் தடைசெய்யப்பட்ட குட்கா, லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.மெயின்கார்டுகேட், என்.எஸ்.பி ரோடு போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர் வசதி, நடமாடும் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் மலைக்கோட்டை பகுதிக்குழு செயலாளராக ஜி.கே.ராமர் தேர்வு செய்யப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu