திருச்சி மன்னார்புரம் பாலத்தில் உயர்கோபுர விளக்கு அமைக்க வேண்டும்
திருச்சி மன்னார்புரம் பாலத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கவேண்டிய இடம்.
திருச்சி மாநகர பகுதிகளில் மிக முக்கிய பகுதி திருச்சி மன்னார்புரம். பை-பாஸ் வசதி ஏற்படுத்தபட்டுள்ளதால் மாநகரத்திற்குள் வர அவசியம் இல்லாத வாகனங்கள் மேம்பாலத்தில் மின்னல் வேகத்தில் கடந்து சென்று கொண்டிருக்கின்ற ஒரு பகுதியாகும். திருச்சி மாநகர எல்லைக்குள் வரும் இந்த மன்னார்புரம் - பஞ்சப்பூருக்கு இரவு நேரங்களில் செல்ல போதுமான மின்விளக்குகள் இல்லாத காரணத்தினால், அடிக்கடி பெரும் விபத்துக்களும், குற்ற செயல்களும் அதிகரித்த வண்ணம் உள்ளதாக அப்பகுதி மக்களால் குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும் கடந்த 1-ந் தேதி வெள்ளிகிழமை இரவு இந்த சாலையில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த முரளி என்ற இளைஞர் கடும் இருட்டு காரணமாக நிலைதடுமாறி விபத்திற்குள்ளாகி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது போன்று பல விபத்துக்கள் இந்த இடத்தில் நடந்துள்ளது.
எனவே திருச்சி பாராளுமன்ற உறுப்பினரும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி நிர்வாகம், காவல்துறையுடன் இணைந்து மேற்படி இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து "ஹைமாஸ்ட் விளக்கு" எனப்படும் உயர் கோபுர மின்விளக்குகளை நிறுவி விபத்துக்களையும், குற்ற செயல்களையும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதை உடனடியாக செய்து மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களை காக்க வேண்டும் என்று சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான கிஷோர்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu