மண்டேலா திரைப்படத்தை தடை செய்ய கோரிக்கை

மண்டேலா திரைப்படத்தை தடை செய்ய கோரிக்கை
X

மண்டேலா திரைப்படத்தை தடை செய்யக் கோரி மாவட்ட வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா என்ற தமிழ் திரைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது . இதில் எங்களுடைய மருத்துவ சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது . அந்த திரைப்படத்தில் எங்கள் தொழிலான முடிதிருத்தத்தை மிகவும் இழிவுபடுத்தும் காட்சிகள் நிறைய இருக்கிறது . இந்த காட்சிகள் தமிழகத்தில் முடிதிருத்தம் செய்யக்கூடிய பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மனதை புண்படுத்துகிறது . எனவே இந்த காட்சிகளை அகற்ற வேண்டும் அல்லது இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் .

மேலும், மண்டேலா திரைப்பட இயக்குனர் அஸ்வின் மற்றும் திரைப்பட குழுவினர் மீது சட்டபூர்வமான முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்டப் போராட்டங்கள் நடத்தப்படும் என வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி மாவட்ட தலைவர் பழனிச்சாமி தெரிவித்தார்.

Tags

Next Story
துணை வட்டாட்சியரிடம் ரூ. 2 கோடி மோசடி..! 3 போ் மீது வழக்குப் பதிவு..!