திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மை கண்காட்சி தொடக்கம்
திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது.
திருச்சி சிங்காரத்தோப்பில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 22.09.2021 முதல் 20.10.2021 வரை (ஞாயிறு உட்பட) நடைபெறும் கொலு கண்காட்சி விற்பனையை திருச்சி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இக்கண்காட்சியின் சிறப்பு அம்சமாக பலவித கொலு பொம்மைகள், கொலு செட்டுகள், கொண்டபள்ளி பொம்மைகள், ஏட்டி கொப்பக்க பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள், காகிதக்கூழ் பொம்மைகள், மண், பளிங்குக்கல், மாக்கல், நவரத்தின கற்களினாலான பொம்மைகள் குறைந்த பட்சமாக ரூ.50 முதல் ரூ.45000 வரை இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
மலைக் கோட்டை, தஞ்சை பெரிய கோயில், பழனி மலை, திருத்தணி, தங்கத்தேர், அம்மன் தேர், முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் விநாயகர் கல்யாணம், பொண்ணு பார்த்தல், பூணுல் செட், காமதேனு லட்சுமி, சிங்கேரி சாரதாம்பாள், உடுப்பி கிருஷ்ணர், கர்ணன் ஜனனம் , ராமர் சீதா சுயம்வரம், பாமா ருக்மணி திருமணம், சித்திபுத்தி திருமணம், வள்ளிதெய்வானை திருமணம், குருகுலப் பயிற்சி, பகா சூர வதம், இராவணன் தர்பார், ராமர் கனையாழி தொடுத்தல், சீதை கனையாழி வாங்குதல், சஞ்சீவி மலை, அகலிகை மோட்சம், பரதன் பாதுகை, சபரி விருந்து,
சூர்ப்பனகை மூக்கு அறுபடுதல், அக்னிப் பிரவேசம், குகன் ஓடம், சீதை ஜனனம், ராமர் ஜனனம், ராமர் வில் உடைப்பு, வாலி வதம், ராவணன் வதம், அன்ன வாகனம், சூர்ய ரதம், கைலாயம் செட், பிரதோஷம் செட், தக்ஷிணா மூர்த்தி, நால்வர் செட், திருப்பாற் கடல், தாயக் கட்டம், அஷ்ட பைரவர், பள்ளிக் கூடம், பல்லாங்குழி, நவக்கிரகம் செட், குசேலர், ராகவேந்திரா, மீனாட்சி, ராஜேஸ்வரி, பாம்பு கருமாரி,
சத்யநாராயணா,அர்த்த நாரீஸ்வரர், பாரதி, காந்தி, குருவாயூரப்பன், சிங்க அம்மன், புலி அம்மன், ரிஷப வாகனம், உற்சவப் பெருமாள், ரெங்கநாதர், சாரதாதேவி, அங்காள பரமேஸ்வரி,கிருஷ்ணர் தொட்டில், கிருஷ்ணர் நடை வண்டி, துலாபாரம், உரல் செட், மண் உருண்டை சாப்பிடுதல், கிருஷ்ணர் பிறப்பு, உரி அடித்தல், ஜலக் கீரிடை, காளிங்க நர்த்தனம், கிருஷ்ணர் மல்யுத்தம், பாஞ்சாலி சுயம்வரம், பீஷ்மர் அம்பு படுக்கை, தொட்டில் குழந்தை, நவதுர்கா, நவநரசிம்மர், ராமர் ஜனனம், புத்திர காமஸ்ரீ யாகம், வசுதேவர், காற்றரக்கன், நாரை வதம், அஷ்ட பைரவர் செட், நவதுர்கா வாகனம், கிராமிய விளையாட்டுகள் செட், வேத மூர்த்திகள் செட், கார்த்திகை தீபம், கல்யாண ஊர்வலம், கிரிக்கெட், சஞ்சீவி செட், பெருமாள் ஊர்வலம் செட், நவ கண்ணிகள் செட், பானைகிருஷ்ணன், தசாவதாரம் செட், அஷ்டலக்ஷ்மி செட், கயிலாய மலைசெட், கார்த்திகைப் பெண்கள் செட், ஸ்ரீரங்கம் செட், அன்னபூரணி செட், நவ நாயகி, விநாயகர் செட், மஹாலக்ஷ்மி வரம் செட், மாயா பஜார் செட், சீனிவாச கல்யாணம் செட்,
மீனாட்சி கல்யாணம் செட், மும்மூர்த்தி செட், ராமர் பட்டாபிஷேகம் செட், தாத்தா பாட்டி செட், பெருமாள் தாயார் செட், ராமர் பாலம் செட், சுக்ரீவர் பட்டாபிஷேகம் செட், கனகதாரா செட், முருகர் உபதேசம் செட், கஜேந்திர மோட்ஷம் செட், மாங்கனி செட், கீதா உபதேசம் செட், ஜோதிர்லிங்கம் செட், பரத நாட்டியம் செட், அசோகவனம் செட், பீஷ்மர் அம்புப்படுக்கை செட், கனையாழி செட், ஆழ்வார் செட், கோபியர் டான்ஸ் செட், விவசாய செட், ஜடாயு மோட்சம் செட், ராமர் செட், அகலியா சாப விமோட்சம் செட் முதலான பொம்மைகள் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, ஆகிய மாவட்டத்திலிருந்தும், கல்கத்தா, இராஜஸ்தான், பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்தும் வரவழைக்கப்பட்ட பொம்மைகள், எண்ணற்ற தனி பொம்மைகளும் பலவிதமான மாடல்களில் வண்ணங்களில் இடம் பெற்றுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu