டீ காபி; டீ காபி -இது விற்பனையல்ல வெல்லமண்டி நடராஜனின் பிரச்சாரம்
டீ காபி கொடுத்து கிழக்கு தொகுதியில் பிரசாரத்தை தொடங்கினார் வெல்லமண்டி நடராஜன்.
மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் தரிசனம் முடித்து பிரசாரத்தை தொடங்கிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் டீக்கடையில் கட்சிக்காரர்களுக்கு டீ, சாம்பார் விநியோகம் செய்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் வந்துவிட்டாலே பிரச்சார வியூகங்கள் பலவிதங்களில் இருக்கும். இறுதி எஜமானர்கள் வாக்காளரகள் தான் என்பதை அரசியல்வாதிகள் நன்கு உணர்ந்து வைத்திருப்பதால் இத்தகைய பிரச்சார வியூகங்களை திட்டமிட்டு மேற்கொள்வார்கள்.
சாதாரண பாமர மக்களை கவரும் வகையில் இத்தகைய பிரச்சாரங்கள் அமையும். அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. அதில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து இன்று காலை திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதில் கலந்து கொண்டு விநாயகரை வணங்கிய வெல்லமண்டி நடராஜன் மலைக்கோட்டை நுழைவு வாயிலில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார்.
என்எஸ்பி ரோடு, நந்தி கோவில் தெரு ஆகிய இடங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். நந்தி கோவில் தெருவில் உள்ள கடைக்கு கட்சியினருடன் டீ குடிக்க சென்றார். அவருடன் பாஜக, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் சென்றனர். அப்போது டீ கடையில் வேலை செய்யும் மாஸ்டர் டீ போட்டு கண்ணாடி டம்ளரில் ஊற்றி விநியோகம் செய்ய தயாராக இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய வெல்லமண்டி நடராஜன், மாஸ்டரை கீழே இறங்கச் சொல்லிவிட்டு டீ பட்டறையில் ஏறினார்.கண்ணாடி டம்ளரில் தயாராக இருந்த டீயை கட்சியினருக்கு விநியோகம் செய்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu