திருச்சியில் விநாயகர் சிலையை கோவில் முன் வைத்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் விநாயகர் சிலையை கோவில் முன்  வைத்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

திருச்சியில் இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சிலையுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்

திருச்சி மலைக்கோட்டை கோவில் முன் விநாயகர் சிலையை வைத்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்


விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும், ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க கோரியும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் முன்பு இந்து மக்கள் கட்சியினர் இன்று காலை விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்..

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி திருச்சி மாவட்ட தலைவர் சந்துரு தலைமை தாங்கினார். இதில் மாநில துணைத்தலைவர் மாரி, மாநில செயலாளர் ஸ்ரீராம், மாவட்ட துணைத் தலைவர் பாலு, மாநகர் மாவட்ட செயலாளர் பாண்டியன், புறநகர் மாவட்ட மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன், மாவட்ட அமைப்பாளர் பெரியண்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார், அகில பாரத இந்து மகாசபா மாநில துணைத் தலைவர் ராகவன்ஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சந்துரு கூறியதாவது,

விநாயகர் ஊர்வலத்திற்கு. தற்போது இந்த விநாயகர் ஊர்வலத்திற்கு தடை விதிக்கிறார்கள். தொடர்ச்சியாக இந்துக்கள் பண்டிகையான ஆடிவெள்ளி, ஆடி அமாவாசைக்கு திதி கொடுத்தல், ஆடி18-ல் அம்மனுக்கு கஞ்சி ஊற்றுதல். மற்றும் தற்போது விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட இந்து பண்டிகைகளுக்கு தொடர்ச்சியாக அரசு தடை விதிக்கிறது. ஆனால் ஸ்ரீரங்கம் அமலா ஆசிரமத்தில் கறி சோறு சமைத்து ஆயிரம் பேருக்கு மேல் சேர்ந்து விழா எடுத்து சாப்பிடுகிறார்கள்..

பள்ளிக்கூடங்கள், பஸ்கள், மதுபான கடைகள் அனைத்தும் திறக்கப்பட்ட பிறகு நோய்த்தொற்று இல்லை. இந்து பண்டிகைகளுக்கு மட்டும் எப்படி நோய் தொற்று வரும். எனவே தடையை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் தடையை மீறி நிச்சயம் நாங்கள் இந்து மக்கள் கட்சி சார்பாக தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை-  நிறுவனங்களுக்கு அறிவுரை