திருச்சி அரசு மருத்துவமனைக்கு சொந்த நிதியில் ஆம்புலன்ஸ் வழங்கிய எம்பி பாரிவேந்தர்
திருச்சி அரசு மருததுவமனைக்கு ரூ 17 லட்சம் செலவில் ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தார் வழஙகினார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற உட்பட்ட தொகுதிகளில் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் கொரோனா நோய்த்தொற்று காரணமாக அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்களை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி வருகிறார் .அதன் ஒரு பகுதியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு இன்று17 லட்ச ரூபாய் மதிப்பிலான நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனத்தையும்,
3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 4 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளையும் நாடாளுமன்ற பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் தனது சொந்த நிதியில் வாங்கி திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு விடம் ஒப்படைத்தார். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
மீண்டும் திமுகவில் இணைவதற்கு வாய்ப்பு உள்ளதா ? என்ற கேள்விக்கு அரசியல்என்பது தேர்தல் நேரத்தில் பேச வேண்டியது.
என் தொகுதி மக்களுக்கும், என்னை தேர்ந்தெடுத்தவர்களுக்கும் சேவை செய்வது தான் எனது வேலை.பொது மக்களது தேவையை பூர்த்தி செய்வதுதான் எனது வேலை.
அரசியல் பேச்சுக்கள் தற்போது தேவையில்லை. நான் திமுக எம்பி தான் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu