திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் அண்ணாசிலைக்கு தி.மு.க. சார்பில் மாலை அணிவிப்பு

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் அண்ணாசிலைக்கு தி.மு.க. சார்பில் மாலை அணிவிப்பு
X

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில்  உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் மாலை அணிவித்தனர்.

அண்ணாவின் பிறந்த நாளையொட்டி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள உருவச்சிலைக்கு தி.மு.க. சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மத்திய மாவட்ட தி.மு.க,பொறுப்பாளர் வைரமணி தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதில் ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ, மாநகர தி.மு.க. செயலாளர் முன்னாள் துணைமேயர் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி, அவைத்தலைவர் அம்பிகாபதி, மாநகர பொருளாளர் டோல்கேட் சுப்பிரமணி, செயற்குழு உறுப்பினர் செவந்தி லிங்கம், ராமலிங்கம், காமராஜ், கலைச்செல்வி, பகுதி செயலாளர்கள் கண்ணன், மோகன்தாஸ், இளங்கோ, ஒன்றிய செயலாளர்கள் கருப்பையா, கதிர்வேல் மற்றும் கழக நிர்வாகிகள் போட்டோ கமால், தர்மு சேகர், சிங்காரம், கலை, ராஜேந்திரன், துர்கா தேவி, பாலமுருகன், சந்திரன், கார்த்திக், மாணிக்கம், எம்ஆர் எஸ் குமார், கதிரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story