திருச்சியில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்
திருச்சி கடைவீதியில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது
நாளை விநாயகர் சதுர்த்தி விழா ஆகும்.விநாயகர் சதுர்த்தியன்று வீடுகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும், கடைகளிலும் விநாயகர் படம் அல்லது சிறிய அளவிலான சிலைகளை வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம். இந்த பூஜையின்போது எருக்க மலர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படும். விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் சிறியதும் பெரியதுமாக தயாரிக்கப்பட்டுள்ளன.
திருச்சி நகரில் காந்தி மார்க்கெட், பெரியகடைவீதி, ஜங்ஷன், உறையூர், தில்லை நகர் , மலைக்கோட்டை,சுப்ரமணியபுரம் பகுதிகளில் விதவிதமான விநாயகர் சிலைகள் சாலையோரங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தன.
அந்த சிலைகளை பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். சிறிய அளவிலான விநாயகர் சிலை ரூ. 50 முதல் ரூ/. 500 வரை விற்கப்பட்டது .சிலையின் வர்ணங்கள் மற்றும் கலை நயத்திற்கு ஏற்றபடி விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu