/* */

திருச்சியில் பட்டாசு விற்பனையாளர் சங்க ஆலோசனைக் கூட்டம்

திருச்சி மாவட்ட பட்டாசு மற்றும் மத்தாப்பு விற்பனையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

HIGHLIGHTS

திருச்சியில்  பட்டாசு விற்பனையாளர் சங்க  ஆலோசனைக் கூட்டம்
X

திருச்சி மாவட்ட பட்டாசு விற்பனையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருச்சி மாவட்ட பட்டாசு மற்றும் மத்தாப்பு விற்பனையாளர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் திருச்சி பெரிய கடைவீதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் அய்யாதுரை, செயலாளர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிர்வாகிகள் ஜெயபால், கனகராஜ், லோகநாதன், சுப்பிரமணியன், சந்திரசேகரன், ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வரும் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனை கடைகள் முறையான அனுமதி பெற்று அரசு அறிவித்துள்ள நடைமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்றி நடக்க வேண்டும். கொரோனா தொற்று பரவாத வகையில் சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும். நிவாரண நிதியாக அமைச்சர் கே.என். நேருவிடம் சங்கத்தின் சார்பில் ரூ. 75 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து பட்டாசு கடைகளிலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பாதுகாப்பு அம்சங்களை முழுமையாக கடைபிடித்து, விழிப்புணர்வுடன் பட்டாசு விற்பனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Updated On: 26 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!