திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், தமிழக மாணவர்களின் டாக்டர் கனவை சிதைத்து தற்கொலைக்குத் தள்ளும் நீட் தேர்வை கைவிட வேண்டும். டெல்லி பெண் காவலர் பாலியல் வன்முறையால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை கண்டித்தும் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிந்தாமணி பகுதி கிளை தலைவர் முகேஷ் கண்ணா தலைமை தாங்கினார். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாநகர மாவட்ட தலைவர் சுரேஷ்,மாவட்ட செயலாளர் லெனின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கயிற்றில் ஸ்டெதஸ்கோப்பை கட்டி அதை தூக்குக் கயிறு போல் மாட்டி வைத்திருந்தனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

போராட்டம் தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநகர மாவட்ட செயலாளர் லெனின் கூறுகையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்ககோரி சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்ட நிலையில் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு தயாராக வேண்டும். மத்திய அரசு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்காவிட்டால் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை ஒன்று திரட்டி தமிழகம் ஸ்தம்பிக்கும் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல இருக்கிறோம் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!