திருச்சியில் திமுக நிர்வாகிகள் கூட்டம்

திருச்சியில் திமுக நிர்வாகிகள் கூட்டம்
X
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் .திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் பகுதி செயலாளர் மதிவாணன் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கே.என்.நேரு பேசுகையில், 1977இல் எம்ஜிஆர் வெற்றி பெற்றபோதும் கிழக்கு தொகுதியில் திமுக தான் வெற்றி பெற்றது. அறிஞர் அண்ணாவும் கலைஞர் அவர்களும் இங்கு வந்து தங்கி பணியாற்றியவர்கள். இன்னும் அநேக தலைவர்கள் இந்த கிழக்கு தொகுதியில் தங்கி பணியாற்றியவர்கள் இருக்கிறார்கள்.

10 ஆண்டுக்கு முன்பு, ஆட்சியில் இருந்த கலைஞர் மாதம் ஒருமுறை திருச்சிக்கு வருகை தந்து பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்துள்ளார். கூட்டுக் குடிநீர் திட்டத்தை மிக சிறப்பாக துவங்கி வைத்தவரும் கலைஞர் தான்.

ஜனதா தளம் எம்ஜிஆரோடு இணையாமல் இருந்திருந்தால் திமுக வெற்றி பெற்றிருக்கும்.எம்.ஜி.ஆர் இருந்திருக்கமாட்டார். அதிமுகவும்,அமமுக வேட்பாளரும் கிழக்கு தொகுதியில் நிற்பது திமுகவின் பலத்தை உறுதி செய்யும் என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.என்.நேரு திமுக ஆட்சியில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும். அதிமுக அரசின் அறிவிக்கப்பட்ட இலவசங்கள் என்பது அவர்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க மாட்டார்கள் என தெரிந்து வெளியிட்டிருக்கிறார்கள்.

எனது மக்கள் திமுகவுக்கு ஆதரவு தந்தால் நாங்களும் எங்களுடைய திட்டங்களை செயல் படுத்துவோம் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!