திருச்சி காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு

திருச்சி காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள்  கரைப்பு
X

திருச்சி காவிரி ஆற்றில், வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.

விநாயகர் சதுர்தியையொட்டி திருச்சியில் வீடுகள், கோவில்களில் வைத்து பூஜை செய்த விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய அனுமதிக்கவில்லை. ஆனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட குறிப்பிட்ட அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்யவும், வழிபாடு செய்து விசர்ஜனம் செய்யவும் எந்த தடையும் இல்லை என அறிவித்தது.

இதனடிப்படையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து பூஜை நடத்தி வழிபாடு செய்தனர். மூன்றாம் நாளான இன்று நீர் நிலைகளில் குறிப்பாக காவிரி ஆற்றில் சிலைகளை கரைத்தனர்.

சுமார் 4 அங்குலம் முதல் ஒரு அடி வரையிலான களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ளகாவிரி ஆற்று பாலத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் பாலத்தின் மேல் நின்றவாறு, ஆற்று தண்ணீரில் தூக்கி போட்டு கரைத்து விட்டு சென்றனர்.

இதே போல திருச்சி மாநகரில் இந்து அமைப்புகள் சார்பில் ஏராளமான பகுதிகளில் சிறிய, சிறிய கோவில்களில் சுமார் 60-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். அந்த சிலைகைளயும் இன்று சிறிய வாகனங்களில் கொண்டு வந்து காவிரி ஆற்று தண்ணீரில் கரைத்து விட்டு சென்றனர்.. இதற்காக மாநகரம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ai and business intelligence