திருச்சி மாநகராட்சி ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

திருச்சி மாநகராட்சி ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
X
திருச்சி மாநகராட்சி ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி சிந்தாமணி பூசாரி தெரு முனிசிபல் காலனி சேர்ந்தவர் வரதராஜ் வயது 36 திருச்சி மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் நேற்று காலை சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள குட் வியூ கெஸ்ட் ஹவுஸ் முன்பு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இருவரிடம் ஏன் இங்கு இந்த நேரத்தில் நிற்கிறீர்கள்? நீங்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்று வரதராஜ் கேட்டு உள்ளார்.

அதற்கு அவர்கள் இருவரும் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கோட்டை போலீசில் வரதராஜ் புகார் கொடுத்தார் புகாரின் மீது கோட்டை போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 294(b), 506(ii) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அந்த கெஸ்ட் ஹவுஸில் மேலாளராக வேலைபார்த்து வரும், பூவாளூர் கோத்தாரி காலனியைச் சேர்ந்த சுரேஷ் முரளி (வயது 52) மற்றும் வரவேற்பாளராக வேலைபார்த்து வந்த முசிறி அடுத்த திருத்தியமலை அருகே உள்ள கீழ பட்டியை சேர்ந்த பாஸ்கர் (வயது 27) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
ai future project