ஓயாமரி எரிவாயு தகனக்கூடம் 20 நாட்களுக்கு இயங்காது

ஓயாமரி எரிவாயு தகனக்கூடம் 20 நாட்களுக்கு இயங்காது
X

திருச்சி ஓயாமரி எரிவாயு தகனக்கூடம் 

பராமரிப்பு பணி நடப்பதால், திருச்சி ஓயாமாரி எரிவாயு தகனக்கூடம் 20 நாட்களுக்கு இயங்காது. மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்தில், வார்டு எண் 8-க்கு உட்பட்ட பகுதியில் ஓயாமரி எரிவாயு தகனம்கூடம் உள்ளது. இதனை நவீனப்படுத்தவும், மராமத்து பணிகள் மேற்கொள்ள இருப்பதால், வரும் அக்டோபர் 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 20 நாட்கள் தகனக்கூடம் இயங்காது.

மாற்று ஏற்பாடாக, வார்டு எண் 57-இல் உள்ள உறையூர் கோணக்கரை தகனக்கூடம் மற்றும் வார்டு எண் 4-ல், ஸ்ரீரங்கம் அம்பேத்கார் நகரில் உள்ள தகனக்கூடத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு, திருச்சி மாநகராட்சி தனி அலுவலர் மற்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!