திருச்சி பிரஸ் கிளப் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிவாரண நிதி ரூ 1 லட்சம் வழங்கல்

திருச்சி பிரஸ் கிளப் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிவாரண நிதி ரூ 1 லட்சம் வழங்கல்
X

திருச்சி பிரஸ் கிளப் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதியாக ரூ ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். அருகில் தலைவர் க.சந்திரசேகர், செயலாளர் ஜோ.மகேஸ்வரன், பொருளாளர் கு.வைத்திலிங்கம், நிர்வாகிகள் இரா.ரமேஷ் | அ.வேலுச்சாமி, உறுப்பினர்கள் எஸ். ஜெய்சங்கர், ஆர்.ராஜசேகர், ஆர். ரமேஷ், கே.ரங்கநாதன் உள்ளனர்.

திருச்சி பிரஸ் கிளப் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ 1 லட்சத்தை வழங்கியது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தொழிலதிபர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சரை இன்று நேரில் சந்தித்த திருச்சி பிரஸ் கிளப் நிர்வாகிகள் பத்திரிக்கையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தமைக்கும், கொரோனா உதவித் தொகையாக, ₹5,000 வழங்குவதற்கும் நன்றி தெரிவித்தனர்.

திருச்சி பிரஸ் கிளப் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 1 லட்சத்திற்கான காசோலையை பிரஸ் கிளப் மூத்த நிர்வாகிகள் முதலமைச்சரிடம் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் திருச்சி பிரஸ் கிளப் தலைவர் க.சந்திரசேகர், செயலாளர் ஜோ.மகேஸ்வரன், பொருளாளர் கு.வைத்திலிங்கம், நிர்வாகிகள் இரா.ரமேஷ் | அ.வேலுச்சாமி, உறுப்பினர்கள் எஸ். ஜெய்சங்கர், ஆர்.ராஜசேகர், ஆர். ரமேஷ், கே.ரங்கநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!