சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: சோழிய வேளாளர் சங்கம் வலியுறுத்தல்

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்:  சோழிய வேளாளர் சங்கம் வலியுறுத்தல்
X

திருச்சியில் நடந்த சோழியவேளாளர் பொதுக்குழுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வெல்லமண்டிநடராஜன்.

கொரோனா நோய்தொற்றால் உயிரிழந்த அனைத்து சமுதாய மக்களுக்கும் இரங்கல் தெரிவித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தமிழ்நாடு முழுவதும் புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென சோழிய வேளாளர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அனைத்து சோழிய வேளாளர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் தலைவர் மயில்வாகனம்பிள்ளை தலைமையில் சத்திரம் பஸ் நிலையம் அருகே ரவி மினி ஹாலில் நேற்று நடைபெற்றது. துணைத் தலைவர் பாஸ்கரன், துணைச் செயலாளர் டைமண்ட்பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், வழக்கறிஞர்கள் கங்கைச்செல்வன், சரவணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.

தீர்மானங்கள்: கொரோனா நோய்தொற்று பாதித்து உயிரிழந்த அனைத்து சமுதாய மக்கள் அனைவருக்கும் இரங்கல் தெரிவிப்பது வ.உ.சி நினைவு தினத்தை தியாக தினம் என்ற அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்சங்களை சட்டமன்றத்தில் அறிவித்த, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கு நன்றி தெரிவிப்பது.

தமிழகம் முழுவதும் இந்த அறிவிப்பை வரவேற்றும் நன்றி தெரிவித்தும் சுவரொட்டிகள் ஒட்டிய அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பது. வெள்ளாளர், வேளாளர் பெயரினை மாற்று சமுதாயத்தினருக்கு அறிவித்தது தொடர்பாக அரசின் முடிவுக்கு எதிராக, சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. எனினும், மாற்று சமுதாயத்தினருக்கு வேளாளர் பெயரினை வழங்கிட அரசாணை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளது. அந்த வழக்கு சம்பந்தமாக அனைத்து ஒத்துழைப்பையும் சங்கம் வழங்குவது, தமிழ்நாடு முழுவதும் புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதில் வெள்ளாளர், வேளாளர் உள்ளிட்ட அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கி ஒரே வேளாளர் இனமாக அறிவித்து, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
ai in future agriculture