வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம்

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம்
X
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று காலை திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் மறியல் போராட்டம்.

வேளாண்சட்டங்களை ரத்து மற்றும் விளை பொருட்களுக்கு கூடுதல் விலையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று காலை திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆறு மாதமாக மூன்று வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே உடனடியாக மத்திய அரசு வேலை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் மேலும், மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக ஆட்சிக்கு வந்தால் வேளாண் விளைபொருள் இரண்டு மடங்காக விலை கொடுக்கப்படும் என கூறினார். ஆனால் உரிய விலை இதுவரை கொடுக்கப்படவில்லை. எனவே, வேளாண் பொருட்களுக்கான விலையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

Tags

Next Story