திருச்சியில் பள்ளி மாணவிகளுக்கு போலீசார் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சியில் பள்ளி மாணவிகளுக்கு போலீசார் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

திருச்சி பள்ளியில் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் குறித்து பள்ளி மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி டவுன்ஹால் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. திருச்சி மாநகர சைபர் கிரைம், கோட்டை மகளிர் காவல் நிலையம் இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சமூக வலைத்தலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எவ்வாறு தொடங்குகிறது, பெண்களின் புகைப்படங்கள் எப்படி திருடப்பட்டு தவறாக பயன்படுத்தப்படுகிறது. எந்தெந்த வெப்சைட்டுகளுக்குள் செல்ல கூடாது. என்பது உள்ளி்ட்ட பாலியல் வன்முறை குறித்த எச்சரிக்கை பற்றிய விழிப்புணர்வு கருத்துகளை பள்ளி மாணவிகள் மத்தியில் எடுத்துக்கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அலெக்ஸாண்டர் தலைமை தாங்கினார்.. இதில் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!