/* */

திருச்சி காவிரி பாலத்தை சீரமைக்க அகில இந்திய வேளாளர் சேனை கோரிக்கை

திருச்சி காவிரி பாலத்தை சீரமைக்க அகில இந்திய வேளாளர் சேனை அமைப்பு கோரிக்கை விடுத்து உள்ளது.

HIGHLIGHTS

திருச்சி காவிரி பாலத்தை சீரமைக்க அகில இந்திய வேளாளர் சேனை கோரிக்கை
X

திருச்சியில் அகில இந்திய வேளாளர், வெள்ளாளர் சேனை கூட்டம் நடந்தது.

அகில இந்திய வேளாளர், வெள்ளாளர் மகாசேனை சார்பாக திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள ராஜேஸ்வரி மினி ஹாலில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பட்டுக்கோட்டை அண்ணாதுரை தலைமை தாங்கினார். பொருளாளர் பழனிவேல், அண்ணாதுரை, மகளிரணி லலிதா, மாநில ஒருங்கிணைப்பாளர் கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதைத்தொடர்ந்து அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் மகா சேனை சார்பாக அனைத்து வெள்ளாளர் அமைப்புகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். வேளாளர்களின் கல்வி வேலைவாய்ப்பு அரசியல் ஆகியவற்றை முன்னிலைப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் அமைப்பை விரிவுபடுத்த வேண்டும்.

சுதந்திர போராட்ட வீரரான தியாகி வ உ.சி.150-வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, திருச்சி காவேரி பாலம் பழுதடைந்து உள்ளது அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை உடனடியாக திருச்சி மாநகராட்சி செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Updated On: 27 Sep 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!