மத்திய அரசை கண்டித்து திருச்சியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

திருச்சியில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தில் பிரிவினை செய்து வேலையும், கூலியும் வழங்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மாதத்திற்கு 6 நாட்கள் மட்டுமே வேலை தருவதற்கு பதிலாக அனைத்து நாட்களும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் சட்டக்கூலி ரூ.273-ஐ குறைக்காமல் வழங்க வேண்டும். பீமாகோரான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். உபா சட்டம் உள்ளிட்ட ஆள்தூக்கி சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநகர் மாவட்ட செயலாளர் வினோத்மணி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநகர் மாவட்ட செயலாளர் சூர்யா ஆகியோர் முன்னிலை தாங்கினர்.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் லாசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட செயலாளர் இந்திரஜித், மாநகர் மாவட்ட செயலாளர் திராவிடமணி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil