பெண்களுக்கு எதிரான வன்முறை கண்டித்து திருச்சியில் ஏ.பி.வி.பி. ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்முறை கண்டித்து திருச்சியில் ஏ.பி.வி.பி. ஆர்ப்பாட்டம்
X

திருச்சியில் ஏ.பி.வி.பி. அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்..

பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுவதை கண்டித்து திருச்சியில் ஏ.பி.வி.பி. அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படுவதை கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே அகில பாரதீய வித்யார்த்தி பரிசத் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் அருண்பிரசாத் இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஸ்வின் மாநில செயற்குழு உறுப்பினர் சூர்யா மாநில செயலாளர் சுசீலா மாநகர இணைச் செயலர் சந்தோஷ் குமார் மாநகர பொறுப்பாளர் நடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் மாநில செயலாளர் சுசீலா கூறியதாவது,

சமீபத்தில் மகளிருக்கான வன்கொடுமைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமாக காணப்படுகிறது. ஹைதராபாத்திலும், உத்திரபிரதேசத்திலும் சிறு குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்து வன்கொடுமை செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். மகளிருக்கான உரிய பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். மகளிருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வில் மாணவர்கள் உயிரிழப்பிற்கு தி.மு.க. அரசு தான் காரணம்.

இந்த உயிரிழப்பிற்கு பிறகு தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்விற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததை ஏ.பி.வி.பி., வன்மையாக கண்டிக்கின்றது.இது போன்று தொடர்ந்து மாணவர்களின் எதிர்காலத்தில் தி.மு..க அரசு விளையாடி வருகிறது. அரசு மாணவர்களின் எதிர்காலத்தில் அக்கறை எடுக்க வேண்டும் என்றார்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பிரசாரம் முடிவுக்கு, நாளை பரபரப்பான வாக்குப்பதிவு..!