திருச்சி: மதுவுக்கு அடிமையான கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி: மதுவுக்கு அடிமையான கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
X
மதுவுக்கு அடிமையான கூலித்தொழிலாளி திருச்சியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகா வென்னமங்கலம் அருகே உள்ள பூதராக நல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). இவர் திருப்பூரில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக அங்கிருந்து பஸ்சில் புறப்பட்டவர் திருச்சிக்கு வந்தார். பின்னர் சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள பூசாரி தெரு, முனிசிபல் காலனி அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று இறந்து போன சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சண்முகத்தின் மகன் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சண்முகத்திற்கு மது பழக்கம் உடையதாகவும் மதுவுக்கு அடிமையானதால் அதில் இருந்து மீள முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்து உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!