திருச்சி:நிதியமைச்சர் மீது அவதூறு பேசிய மாரிதாஸ் மீது போலீசில் புகார்

திருச்சி:நிதியமைச்சர் மீது அவதூறு பேசிய மாரிதாஸ் மீது போலீசில் புகார்
X

மாரிதாஸ் மீது தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் புகார் மனு கொடுத்தனர்.

நிதியமைச்சர் மீது அவதூறு பேசியதாக சௌதாமணி, மாரிதாஸ் மீது திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குறித்து அவதூறு பரப்பியதாக சௌதாமணி மற்றும் மாரிதாஸ் ஆகியோர் மீது திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று தி.மு.க. சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.

திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் அருண் தலைமையில், ஸ்ரீரங்கம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பாலா, திருச்சி மேற்கு தொகுதி அமைப்பாளர் கோவிந்தசாமி, சமூக வலைதள அமைப்பாளர் ஆசிக், லால்குடி தொகுதி சமூகவலைத்தள அமைப்பாளர் தமிழ், கொடியாலம் ஊராட்சி அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் ஒண்றிணைந்து இந்த மனுவை கொடுத்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!