700 ஆயுள் தண்டனை கைதி விடுதலை நாட்டுக்கே ஆபத்து- பா.ஜ. க.தேசிய செயலாளர் பேட்டி
திருச்சி விமான நிலையம் அருகே உள்ள வயர்லஸ் சாலையில் பா.ஜ.க மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பொறுப்பாளரும் தேசிய பொதுச்செயலாளருமான சி.டி.ரவி, நிர்வாகிகள் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், சீனிவாசன் உள்ளிட் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் சி.டி.ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பா.ஜ.க சார்பில், செப்டம்பர் 17-ந்தேதி முதல் அக்டோபர் 7-ஆம் தேதி வரை சேவா சமர்ப்பியன் பிரச்சாரம் நடைபெறுகிறது.
தி.மு.க. அரசின் தேன்நிலவு காலம் முடிந்து விட்டது. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதை விட மத்திய அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை மட்டுமே முன்னெடுக்கிறார்கள். பிரதமர், மத்திய அரசுக்கு எதிராக மட்டுமே பேசி வருகிறார்கள்.
தி.மு.க. அரசு அண்ணா பிறந்த நாளையொட்டி 700 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே எதிரானது. இது ஆபத்தான முடிவு. தேச விரோத செயலாகும்.
நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். இதை மறைத்து, தி.மு.க. எதிர்மறைப் பிரச்சாரம் செய்கிறது. சட்டப்பேரவையில் இன்று நீட் எதிர்ப்பு மசோதாவை அ.தி.மு.க, பா.ம.க ஆதரித்துள்ளது, அது அவர்கள் கட்சியின் நிலை. ஆனால், பா.ஜ.க கூட்டணியில் அவர்கள் உள்ளனர்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க நிச்சயம் போட்டியிடும். தனித்தா? கூட்டணியா? என்பதை மாநில நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்,இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu