திருச்சியில் ரூ.4 கோடி மோசடி 4 பேர் கைது

திருச்சியில் ரூ.4 கோடி  மோசடி 4 பேர் கைது
X
திருச்சியில் ரூ.4 கோடி மோசடி செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்

திருச்சி பிராட்டியூரை சேர்ந்தவர் மிதுன் சமேஷ்(வயது 28). இவர் கடந்த ஜூன் மாதம் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில் திருச்சி கல்லுக்குழியில் உள்ள எல்பின் கம்பெனியில் முதலீடு செய்தால் அதற்கு குறிப்பிட்ட நாள் முடிந்து 3 மடங்கு லாபம் தருவதாக ஏஜெண்டுகள் (கேன்வாசர்கள்) கூறியதையடுத்து அந்நிறுவனத்தில் ரூ.72 லட்சத்து 82 ஆயிரத்து 500-ஐ வங்கி மூலமும் நெட் பேங்கிங் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ் மூலம் முதலீடு செய்தேன்



நான் முதலீடு செய்த பணத்தை 10 மாதம் கழித்து 3 மடங்கு தருவதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் ராஜா மற்றும் ரமேஷ் குமார் ஆகிய 2 பேரும் கூறினர். அவர்கள் கூறிய ஆசை வார்த்தையை நம்பி நானும் எனது உறவினர்கள் 10 பேரிடம் இருந்து மேலும் ரூ. 43 லட்சத்து 28 ஆயிரத்து 400-ஐ பெற்று கொடுத்தேன். அந்த வகையில் மொத்தமாக ரூ.2.18 கோடியை எல்பின் நிறுவனத்தில் கட்டினோம். ஆனால் அந்த நிதி நிறுவனம் கூறியபடி குறிப்பிட்ட காலத்தல் 3 மடங்கு பணத்தை தருவதாக கூறி, தராமல் ஒரு சிறு தொகை மட்டும் கொடுத்தது. நாங்கள் செலுத்திய பணத்திற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில் ரூ.4 கோடியே 68 லட்சத்து 55 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை தரவில்லை. கட்டிய பணத்தை கேட்டு சென்ற போது தகாத வார்த்தைகளால் பேசி, ராஜா, ரமேஷ், இளங்கோவன், பால்ராஜ், அறிவுமணி, சாகுல் ஹமீது, மதிவாணன், ராஜப்பா, பாதுஷா உள்ளிட்ட 10 பேர் என்னை கொல்ல முயற்சித்தார்கள் என குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் தொடர்பாக திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் எல்பினில் ஏஜெண்டுகளாக இருந்த பால்ராஜ் (வயது 58), அறிவுமணி (வயது 48), பாபு (வயது 50), இளங்கோவன்(வயது 50) ஆகிய 4 பேரை பிடித்து போலீசார் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி முசிறி கிளை சிறையில் அடைத்தனர்.



மேலும்இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய அந்த நிறுவன உரிமையாளர்கள் ராஜா, ரமேஷ் குமார் உள்ளிட்ட முக்கிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். சென்னையில் பதுங்கி இருக்கும்அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!