/* */

200 படுக்கையுடன் கூடிய சித்தா கொரோனா புத்துணர்வு மையம் அமைச்சர் திறப்பு

திருச்சியில் 200 படுக்கைகளுடன் கூடிய சித்தா கொரோனா புத்துணர்வு மையம்.அமைச்சர் கே.என்,நேரு திறந்துவைததார்

HIGHLIGHTS

200 படுக்கையுடன் கூடிய சித்தா கொரோனா  புத்துணர்வு மையம்  அமைச்சர் திறப்பு
X

திருச்சி காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் 200 படுக்கைகள் கொண்ட சித்தா கரோனா புத்துணர்வு மையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கே.என். நேரு இந்த மையத்தை இன்று திறந்து வைத்தார். இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்விததுறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, கிழக்கு எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்திலேயே முதன் முறையாக 200 படுக்கைகள் கொண்ட சித்தா புத்துணர்வு மையம் திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். திருச்சி மாவட்டம் மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கரோனா நோயாளிகள் இந்த மையத்தில் தங்கி சிகிச்சை பெறலாம்.

கரோனா தொற்று வந்த பிறகும், வருவதற்கு முன்பு தடுக்கவும் இங்கு மருந்துகள் வழங்கப்படும். திருச்சி மாவட்டத்தை கரோனா இல்லாத மாவட்டமாக மாற்ற மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இங்கு சித்த மருத்துவர்கள் மட்டுமே பணியில் இருப்பார்கள். ஆக்சிஜன் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகள் நவீன மருத்துவத்திற்கு பரிந்துரை செய்யப்படுவார்கள் என்றார்.

Updated On: 16 May 2021 5:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  3. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  4. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  5. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்
  7. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  8. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  10. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?