+2 செய்முறை தேர்வு -திருச்சியில் 17,900 மாணவர்கள் எழுதினர்

+2 செய்முறை தேர்வு -திருச்சியில் 17,900 மாணவர்கள் எழுதினர்
X
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மே 5 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. முன்னதாக செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கின.

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மே 5 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. முன்னதாக செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கின. திருச்சி மாவட்டத்தில் உள்ள 257 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த 17 ஆயிரத்து 900 மாணவ மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வை எழுதினர். இவர்களுக்காக இன்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் 195 மையங்கள் அமைக்கப்பட்டது.

கொரோனா பரவலுக்கிடையே செய்முறை தேர்வு நடைபெறுவதால் தனிமனித இடைவெளி, முகக்கவசம், கையுறை அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு, அதன் பின்னரே மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ள மாணவர்களுக்கு வேறு ஒரு நாளில் தேர்வுகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கி வருகிற ஏப்ரல் 23ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!