திருச்சி மலைக்கோட்டை பகுதியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தீவிர பிரசாரம்

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தீவிர பிரசாரம்
X
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மலைக்கோட்டை பகுதியில் வீதி, வீதியாக தீவிர பிரசாரம் செய்தார்.

திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் இன்று மலைக்கோடடை பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது :

மகளிருக்கு 1500 ரூபாய் பணம், 6 சிலிண்டர் இலவசம், வாஷிங் மெஷின் உள்ளிட்ட அதிமுகவின் அத்தனை வாக்குறுதிகளும் 100 சதவீதம் நிறைவேற்றப்படும். திருச்சியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கு 1200 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

அந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். நல்ல சாலைகள் அமைத்து தரப்படும். மின்வெட்டே இல்லாத மாவட்டமாக திருச்சி உள்ளது. குடிநீர் தட்டுப்பாடு இல்லை. சட்டம் ஒழுங்கு பராமரிப்பு சீராக உள்ளது.

எனவேஹாட்ரிக் சாதனையை அதிமுக நிகழ்த்திட உங்கள் வாக்குகளை ஆதரவை தாருங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பிரச்சாரத்தில் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணைச் செயலாளர் சீனிவாசன், மாவட்டத் இணைச்செயலாளர் ஜாக்லின், அவைத்தலைவர் ஐயப்பன், முன்னாள் எம்பி ரத்தினவேல் உள்ளிட்ட ஏராளமான அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!