அதிமுக நிர்வாகி அமமுகவில் இணைந்தார்

அதிமுக நிர்வாகி அமமுகவில் இணைந்தார்
X

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட மருத்துவ அணியை சேர்ந்த டாக்டர் சுப்பையா இன்று அமமுகவில் இணைந்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.இதற்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் குறிப்பாக திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பால் பலரும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பத்மநாதனை மாற்ற கோரி அதிமுக கருமண்டபம் பகுதி செயலாளர் ஞானசேகரன் தலைமையில் அதிமுகவினர் போர்க்கொடி தூக்கினர்.இந்நிலையில் போர்க்கொடி தூக்கியவர்களில் ஒருவரான சித்த மருத்துவர் டாக்டர் சுப்பையா கடும் அதிருப்தியில் இருந்தார்.இந்நிலையில் இன்று அவர் அமமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.

Tags

Next Story
ai in future agriculture