விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் தங்கம் பறிமுதல்

விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் தங்கம் பறிமுதல்
X

திருச்சி விமான நிலையத்தில் 4 பயணிகளிடம் இருந்து ரூ. 35 லட்சம் மதிப்பிலான 693 கிராம் தங்கத்தை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த அருண்பாண்டி என்பவரிடம் ரூ. 8,01,850 மதிப்பிலான சுமார் 158 கிராம் தங்கமும், இதே விமானத்தில் பயணம் செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த துரைசாமி என்பவரிடம் இருந்து ரூ 9,54,100 மதிப்பிலான 188 கிராம் தங்கமும், பெரம்பலூரை சேர்ந்த சத்யராஜ் (32) என்பவரிடமிருந்து ரூ 8,12,000 மதிப்பிலான 168 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த திருச்சியை சேர்ந்த நாகராஜ் என்பவரிடமிருந்து ரூபாய் 9,41,545 மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 4 பேரிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!