வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடக்கம்
X

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து சட்டமன்ற தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு துவக்கி வைத்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 9 தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவங்கியது. முன்னதாக மாவட்டஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்பாக திறக்கப்பட்டு இயந்திரங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 5504 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 4079 கட்டுப்பாட்டு கருவிகளும், 4247 விவி.பேட் இயந்திரங்களும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பேட்டியளித்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு,அவசர தேவைகளுக்காக 20 சதவீத இயந்திரங்கள் கூடுதலாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil