திருச்சியில் குடிநீர் விநியோகம் தடை

திருச்சியில் குடிநீர் விநியோகம் தடை
X

திருச்சியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (மார்ச் 5 ம் தேதி) குடிநீர் விநியோகம் இருக்காது.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொட்டையம்பேட்டை அருகில் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருவதால், ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள தரை மட்ட நீர்தேக்கத் தொட்டியிலிருந்து அரியமங்கலம் மற்றும் பொன்மலை பகுதிக்கு செல்லும் ராட்சதகுழாயுடன், புதிய குழாய் அமைக்கும் பணி முடிவுற்று பழைய பிரதான குழாயுடன் இணைக்க வேண்டியுள்ளதால் நாளை (5ம் தேதி) ஒருநாள் மட்டும் கீழ்கண்ட இடங்களில் குடிநீர் விநியோகம் இருக்காது.

அதன்படி அரியமங்கலம் கோட்டம்,கோ-அபிஷேகபுரம் கோட்டம்,எடமலைப்பட்டிபுத்தூர், கே.சாத்தனூர், அன்புநகர், கிருஷ்ணமூர்த்தி நகர், தொண்டைமான் நகர், கிராப்பட்டி பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. நாளை மறுநாள் (6 ம் தேதி) அன்று முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று திருச்சி மாநகராட்சி ஆணையர் வௌியிட்டுள்ள செய்தி குறிப்பில் தொிவித்துள்ளார்.

Tags

Next Story
the future of ai in healthcare