கொரோனா தடுப்பூசி வதந்திகளை நம்ப வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனோ இரண்டாம் தடுப்பூசி கோவாக்சினை போட்டுக்கொண்டார்.
பின்னர்செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் :
சில மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கைசற்று உயர்ந்து இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, இதற்கு காரணம் சுகாதர துறை பணியாளர்களின் தொடர் உழைப்பு.
தடுப்பூசி என்றாலே பொதுவாக பல வதந்திகள் வருவது வழக்கமான நிகழ்வாக உள்ளது. ஆனால் கொரோனோ தடுப்பூசியை போட்டுக் கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை திட்டவட்டமாக தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். அதற்கு முன்னுதாரணமாக சுகாதாரத் துறை பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் என அனைவருமே தடுப்பூசியை போட்டுக் கொள்கிறார்கள். தமிழகத்தை பொறுத்த வரை 3லட்சத்து 59 ஆயிரம் பேர், முன்களப் பணியாளர்கள் நேற்று வரை தடுப்பூசிகளை போட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை, கோவாக்சின் - 1,89000
கோவிஷீல்ட் - 14,85000 ஊசிகள் வந்துள்ளது. பொதுமக்களுக்கு ஊசி போடுவது குறித்து ஒப்புதலுக்காக காத்து இருக்கிறோம், வந்தவுடன் ஆரம்பிப்போம். ஒரு நாளுக்கு 10 ஆயிரம் என்கிற எண்ணிக்கையில் ஊசிகள் போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இரண்டாவது அலை வருவதற்கு சாத்திய கூறுகள் மிகவும் குறைவு என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu