திருச்சி அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

திருச்சி அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
திருச்சி அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டை சேர்ந்தவர் செல்லையா. தனது 15 வயது மகளை திருச்சி நவலூர் குட்டப்பட்டை சேர்ந்த இன்னாசி முத்து மகன் ஜெரால்டு (வயது 25) என்பவர் கடந்த 08 - 11 - 2023-ம் தேதியன்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்றுள்ளார் என்று ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுபற்றி ராம்ஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடத்தப்பட்டவர் மைனர் பெண் என்பதால் அவர் பாலியல் சீண்டலுக்கு ஆளானாரா? என்பது பற்றியும் விசாரணை செய்தனர். இதில் பாலியல் சீண்டல் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஜெரால்டு மீது ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் போலீசார் ஜெரால்டுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறுமி கடத்தப்பட்ட விவகாரத்தில் சில முக்கிய நபர்கள் உதவி செய்து இருக்கலாம் என்று கோணத்தில் தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story